Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கட்டாயம் பின்பற்ற வேண்டும்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… கலெக்டரின் செயல்…!!

கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்களுக்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதற்கான பிரச்சாரத்தை துவக்க விழாவை முதலமைச்சர் துவைக்கி வைத்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பதாகையில் கையொப்பமிட்டு பொதுமக்களுக்கு முக கவசம், கொரோனா தொற்றின் விழிப்புணர்வு பற்றியும் மற்றும் கபசுர குடிநீரையும் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இம்மாவட்டத்தின் பேருந்து நிலையத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கிருமிநாசினி, முககவசம், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவை பற்றி கலெக்டர் ஆர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் கூட்ட நெரிசல் இன்றிப் செயல்படுதல் மற்றும் முககவசம் அணிதல் என கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுகளை கலெக்டர் ஆர்த்தி பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.

Categories

Tech |