ஜெர்மனியில் ஒரு நகரத்தின் குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்து 9 நபர்கள் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டார்கள்.
ஜெர்மனியில் உள்ள Horn Bad Meinberg என்ற நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் மரத்தால் செய்யப்பட்ட பால்கனியில் சில இளைஞர்கள் நின்றுள்ளனர். அப்போது திடீரென்று பால்கனி இடிந்து விழுந்ததில், அங்கிருந்தவர்கள் கீழே விழுந்தவுடன் அடுத்த மாடியில் இருக்கும் பால்கனியும் இடிந்து விழுந்து அனைவரும் தரையில் விழுந்து விட்டார்கள்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் மாட்டியவர்களை மீட்டுள்ளார்கள். தீயணைப்பு வீரர்கள் 70 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் நான்கு இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விபத்து தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.