பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்துமாணவியின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவியை தேடியும் , மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடினர். இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே இருக்கும் பூசாரிப்பட்டியில் ரோட்டோரம் மாணவியின் உடல் கிடந்ததுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர் சதீஷ் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இதில் சதீஷ் 4 ஆண்டுகளாக மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடல் , மாணவியின் கழுத்து, மார்பு என 3 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.மாணவி பிரகதிக்கு வருகிற ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.