Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மேயரின் உறுதி…. அந்த ஒரு வார்த்தைக்காக…. தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்….!!!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் மேயர் ஆலோசனை நடத்திய பிறகு தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். மேலும் மேயர் கல்பனாவின் உறுதியை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக  அறிவித்துள்ளனர்.

Categories

Tech |