Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் நடத்தப்பட்டதா….? காவல்துறை விளக்கம்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் வெடி விபத்து நடந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உடற்கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்ததால் தீபாவளியை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் என பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் குற்றம் சுமத்தியது. அதன் பின் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்படும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறைதான் கோவையிலும் நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இது தொடர்பான செய்திகளுக்கு தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது ரேஸ் கார்ஸ், மாநகராட்சி அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு டைரியில் எழுதி வைத்தது கிடைத்துள்ளது. அதன் பிறகு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு விபத்து நடந்த காரில் அதிக அளவில் வெடி பொருட்கள் இருந்ததாலும், சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவும் கார் உருக்குலைந்து போயிருக்கலாம்.

இதனையடுத்து கார் விபத்து நடைபெறுவதற்கு முன்பாக தன்னுடைய நண்பர்களுடன் ஜமே =ஷா பல இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று ஒத்திகை பார்த்துள்ளார். விபத்து நடந்ததற்கு முந்தைய நாள் இரவு ஜமேஷா வீட்டில் இருந்து ஒரு பெரிய மூட்டையில் பொருட்களை வெளியே எடுத்துச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக ஜமேஷா பல்வேறு நபர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தாக்குதல் சம்பவம் பல்வேறு நபர்களின் திட்டமிடல் படி நடந்துள்ளதால் கண்டிப்பாக ஒற்றை ஓநாய் முறை தாக்குதலாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |