Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்மல காப்பி அடிச்சுட்டாங்க… தமிழகம் வல்லரசாகும்…. கேப்டன் மகன் அதிரடி …!!

கேப்டன் விஜயகாந்த் ஆட்சியில் அமர்ந்தால் நாடு வல்லரசாகுமென விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்தார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து மடல் வெளியிட்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உலக மகளிர் தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதிஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய விஜயபிரபாகரன், நல்ல தலைவனை, மிகச்சிறந்த தலைவனை 15 வருடங்களாக இழந்தது தமிழக மக்கள் தான். தேமுதிகவின் திட்டங்களை தான் பக்கத்து மாநில முதல்வர்கள் காப்பி அடித்துள்ளனர். ஆட்சியில் விஜயகாந்த் அமர்ந்தால் தமிழகம் வல்லரசாக மாறும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |