Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்க விளைச்சல் கிடையாது… டெல்லிக்கு அனுப்பப்படும் 1 லட்சம் தேங்காய்கள்… முக்கிய பங்களிக்கும் தமிழக விவசாயிகள்…!!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு லட்சம் தேங்காய்களை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனுப்ப உள்ளனர்.

திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக்கவுண்டர் பேட்டி அளித்த போது, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு வன்முறையாளர்களை தூண்டிவிட்டு குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கு அவப்பெயரை உண்டாக்கி உள்ளனர் என்றும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மற்ற மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறுவது தவறான பிரச்சாரம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு விவசாயி தோட்டத்தில் இருந்து 10 தேங்காய்கள் வீதம் 1 லட்சம் தேங்காய்களை அனுப்ப உள்ளோம் என தெரிவித்துள்ளார். இதற்காக திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேங்காய் சேகரிக்கும் பணியானது நடந்து கொண்டு வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் இந்த தேங்காய்கள் டெல்லிக்கு அனுப்பப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் தேங்காய் விளைச்சல் கிடையாது என்பதாலேயே தமிழக விவசாயிகளின் பங்களிப்பாக தேங்காய்களை டெல்லிக்கு அனுப்பப் போவதாகவும், டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 100 பேர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,

Categories

Tech |