‘கோப்ரா’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”கோப்ரா”. இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கை விக்ரம் முடிந்துள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Woah!! Finally #ChiyaanVikram sir wraps up his shoot for #Cobra 🔥🔥.. What a magical experience this has been!! Loveddddddddd working with you sir.. You are for sure an acting monster!! 🔥🔥🔥 Shall keep these memories very close to my heart ❤️❤️❤️ pic.twitter.com/rZ98YIkKgU
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) January 5, 2022