Categories
உலக செய்திகள்

ஸ்வாந்தே பாபோ குளத்தில் வீசிய ஊழியர்கள்… எதற்காக தெரியுமா?.. வெளியான வீடியோ…!!!

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாந்தே பாபோவிற்கு இந்த வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உற்சாகமாக அவரை தூக்கி குளத்தில் போட்டு கொண்டாடியிருக்கிறார்கள்.

உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வருடந்தோறும் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும். நோபல் பரிசு என்பது சான்றிதழ், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது.

தற்போது இந்த வருடத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், சுவீடன் நாட்டின் ஸ்வாந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவரை பாராட்டும் விதமாக ஜெர்மன் நாட்டில் இருக்கும் மேக்ஸ் பிளாங்க் என்ற மையத்திற்கு வந்த அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் அதனை கொண்டாடும் விதமாக அந்த மையத்தில் இருக்கும் குளத்தில் அவரை தூக்கி எறிந்திருக்கிறார்கள். அதாவது பாரம்பரியமாக அங்கு பிஹச்டி பட்டம் பெற்றவர்களை அந்த குளத்தில் தூக்கி வீசுவார்கள். அதேபோல் அவர் நோபல் பரிசு பெற்றதை கொண்டாடுவதற்காக அவரை குளத்திற்குள் தூக்கி எறிந்து கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ நோபல் பரிசு அமைப்பினுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |