Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு!

கொரோனா சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் 2,834 மருத்துவ பணியாளர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவை பிறப்பித்துள்ளார். 1,239 மருத்துவர்கள் உட்பட 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவப் பணியாளர்கள், 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அரசு பணியில் அல்லாத 574 மருத்துவ மாணவர்களை ரூ.75,000 மாத ஊதியத்தில் மருத்துவமனைகளில் பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத ஊதியம் ரூ.15,000 வீதம் 365 ஆய்வக பணியாளர்களையும் நியமிக்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். மேலும் மாத ஊதியம் ரூ. 12,000 வீதத்தில் 1,230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நலவாழ்வுத்துறை மூலம் மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் இணைந்து வருகிறார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |