பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி உஸ்மான் புஷ்டர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. எனவே பிரதமர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானம் தாக்கல் செய்வதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு, பிரதமர் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரே ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே, இம்ரான் கானின் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த தீர்மானத்திற்கான விவாதமானது வரும் 31-ஆம் தேதி அன்று நடக்கவிருக்கிறது. இதனிடையே பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரியான உஸ்மான் புஸ்டர் மீதும் நம்பிக்கையற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
உஸ்மான் புஸ்டர் இம்ரான் கானின் கு நம்பிக்கைக்குரிய நபராக இருந்ததால் அவரின் ஆட்சியையும் கவிழ்க்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில் உஸ்மான் புஸ்டர் தன் பதவியில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.