Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரின் ஐடியா…. “மனித கடவுளே” விளம்பரத்துக்கு ரூ10,00,00,000 செலவு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சமீபத்தில் மாணவர்கள் முதல்வரை பாராட்டியதுபோல் வந்த விளம்பரங்களுக்கு அமைச்சர் ஒருவர் 10 கோடி செலவழித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், தற்போதைக்கு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வும்  ரத்து செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து கல்லூரி பருவத் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு அரசு சார்பில் தேர்ச்சி அறிவித்ததைத் தொடர்ந்து பத்திரிகைகளில் “மாணவர்களின் மனித கடவுளே” எங்கள் ஓட்டு உங்களுக்கே! என்று தமிழ்நாடு மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது. இதனிடையே இந்த விளம்பரம் தென்  மாவட்ட அமைச்சர் ஒருவரின்  ஐடியா என்றும், இந்த விளம்பரத்திற்காக மட்டும் 10 கோடி செலவழிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

Categories

Tech |