கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கடந்த வாரம் விமான விபத்து ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளை அதிகாரிகளோடு மிக நெருக்கமாக இருந்து கேரள முதல்வர் பினராய் விஜயன் பார்வையிட்டு விபத்தில் சிக்கிய மக்களை பாதுகாக்க உதவி வந்தார். இந்நிலையில் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள முதல்வர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.