Categories
அரசியல் மாநில செய்திகள்

CM ஆசை இல்லை…! எனக்குன்னு பெயர் இருக்கு…. அதுவே போதும்னு சொன்ன வைகோ …!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நான் எப்போதுமே முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசை பட்டது இல்லையே. அப்படி எந்த ஒரு மேடையிலும் நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக வருவேன் என்று பேசியது கூட இல்லையே 27 ஆண்டு காலத்தில்….. ஒரு கூட்டத்தில் கூட நான் அப்படி சொன்னது இல்லையே.

கட்சியை மேலும் கட்டமைத்து, வலுப்படுத்தி கொண்டு போகவேண்டும். இப்போது கொரோனா வந்ததினால் எல்லாம் முடங்கிப் போபோய்விட்டது. வழக்கமாக வருவதில் கூட இன்றைக்கு கொஞ்சம் பேர் குறைந்து போயிட்டார்கள். மழை பெய்தால் வழக்கமாக வரக்கூடிய நிருபர்கள் வருவார்களா ? அப்படி என்று சந்தேகப்பட்டேன்.

10.5% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் இரத்து செய்ததற்கு, திராவிட முன்னேற்ற கழகம் தனது கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளது. அது தான் என்னுடைய கருத்தும். வாழ்நாள் முழுவதும் போராடினான், வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டினுடைய நன்மைக்காகவும், ஈழ தமிழருடைய நலனுக்காகவும், உலக தமிழர்களுக்காகவும் போராடுகிற வாழ்கை நடத்தினான் என்கிற அந்த பெயரை நான் நிலைநாட்டுவேன், அது போதும் எனக்கு.

ஜெயிலுக்கு போகிற வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய சுயசரிதையை எழுதுவேன். இந்திய அரசு இலங்கை அரசோடு ஒரு கூட்டுசதி மாதிரி ஈழத்தமிழர்களுக்கு விரோதாகவே ஜெனிவாவிலும்,  அங்கே மனித உரிமை கவுன்சிலிலும், அவர்களுடைய அணுகு முறையிலும் செயல்பட்டு வருகிறது. அது ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு செய்கின்ற துரோகம் ஆகும்.

போராட்டங்கள் மூலமாக தானே வெற்றி கிடைக்கிறது, விவசாயிகள் போராடினார்கள். 700 பேர் உயிரிழந்தார்கள், அந்த போராட்டத்தில் மத்திய அரசு எவ்வளவு பிடிவாதமாக இருந்தது, நாங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் இந்த 3 சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் என்று சொன்னவர்கள்,  கடைசியில் மண்டியிட வேண்டிய நிலைமை தானே வந்தது என தெரிவித்தார்.

Categories

Tech |