Categories
சினிமா தமிழ் சினிமா

“கோமாளிகள் திருந்தவே மாட்டாங்க” நயன்-விக்கி விவகாரத்தில் கஸ்தூரிக்கு வனிதா பதிலடி…..? வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய twitter பக்கத்தில் கூறியிருந்தார். இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், வாடகை தாய் மூலமாக குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது.

கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் சட்டத்தை மீறி வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டனரா என்ற கேள்வி தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் மருத்துவ ரீதியான பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்றும், கடந்த ஜனவரி மாதமே வாடகை தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களுக்கு அதைப்பற்றிய நிறைய தகவல்களை கேள்விபடுவோம் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நயன்-விக்கி தம்பதிக்கு நடிகை வனிதா வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவருடைய வாழ்க்கையின் அழகான தருணங்களை அழிப்பவர்கள் தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கிறதும் ட்வீட் போடுவதும் வழக்கமாயிட்டு. இவங்க திருந்தவே மாட்டாங்க. கடவுள் பார்த்துக் கொள்வார். யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் வனிதாவின் பதிவை பார்த்த ரசிகர்கள் நடிகை கஸ்தூரியை மறைமுகமாக திட்டுகிறீர்களா என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |