இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ” கோமாளி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல பிரபலமானது.
இதனையடுத்து, பிரதீப் ரங்கநாதன் புதிதாக அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும், இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
After listening to a lot of scripts locked our next projectSuper happy to introduce @pradeeponelife as hero under our banner @Ags_production for a kickass script written and directed by him 😊 #Ags22 #KalpathiAghoram #KalpathiGanesh #KalpathiSuresh @aishkalpathi @venkatmanickam5 pic.twitter.com/H0EYrSxWY1
— Archana Kalpathi (@archanakalpathi) October 4, 2021