Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. தூய்மைப்படுத்தும் பணியில் அதிகாரிகள்…. ஆய்வு செய்த அலுவலர்….!!

உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு பெட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு படப்பையில் இருக்கும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த பணிகளை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து இருப்பில் இருக்கும் 1, 776 பெட்டிகளில் 50 சதவீதத்துக்கும் மேலாக தூய்மை பணி நடைபெற்றுள்ளது. மேலும் தேர்தலுக்கான ஆயத்தப்பணி தீவிரமாக நடைபெருகிறது என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |