Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்… 13 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 12 பேரை கைது செய்த காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரையும் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் என்னும் கிராமத்தில் முன்பகை காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மற்றும் சக்தி ஆகிய இருவரும் எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சேர்ந்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவல்துறை அதிகாரியை அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் எஸ்.பி. பட்டினம் காவல்துறையினர் அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |