ராமநாதபுரத்தில் இரு தரப்பினரிடையே நடந்த தகராறில் போலீசார் 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் நம்பு சுப்பிரமணியன் என்பவர் பழுதான படகுகளை பழுது பார்க்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். இந்நிலையில் சுப்ரமணியன் தொழில் நடத்தி வரும் இடம் தொடர்பாக முக்குத்தி முருகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முக்குத்தி முருகன் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுப்பிரமணியன் மகன்களான பாலசுதர்சன் மற்றும் ஸ்ரீகாந்த்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளது.
இந்த தகராறில் ஸ்ரீகாந்துக்கு அரிவாள் வெட்டு கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பலத்த காயம் அடைந்த பாலசுதர்சனையும் ஸ்ரீகாந்தையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் துறைமுக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட மூக்குத்தி முருகன் மற்றும் கருப்பையா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.