சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை நடிகர் அப்பாஸ் கூறியுள்ளார் .
தமிழ் திரையுலகில் காதல் நாயகனாக வலம் வந்து ஏராளமான இளம் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அப்பாஸ். இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் எதுவும் சரியான வரவேற்பை பெறவில்லை . இதனால் நடிகர் அப்பாஸ் பெரும்பாலான படங்களில் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார் . பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு ‘திருட்டுப்பயலே’ படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்திருந்தார் . அதன் பின்னால் எந்த படத்திலும் நடிகர் அப்பாஸ் நடிக்கவில்லை .
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அப்பாஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள் ? என்ற கேள்விக்கு அப்பாஸ் ‘என்னை வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை. நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி விட்டேன் . தற்போது என் குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார் .