ட்ரங்க் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘விஜயானந்த்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் நிஹால் நடித்துள்ளார். கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில், நடிகை வினயா பிரசாத், ஆனந்த் நாக், ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த படத்தின் நாயகன் நிஹால் பேசுகையில், நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் முதலில் பார்த்த சினிமா குரு. இந்த திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க வேண்டும் எனக்கூறும் போது உடனடியாக ஒப்புக்கொண்டேன். மேலும், ‘சினிமா என்பது ஒரு கலை. வியாபாரம் அல்ல’. இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.