காதலன் பற்றிய கேள்வி எழுப்பிய பொழுது எனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் என பிரியா பவானி சங்கர் உருக்கமாக பதிலளித்துள்ளார்
தொலைக்காட்சி சீரியல்களில் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் தற்போது திரையுலகிலும் தனது கால் தடத்தை பதித்துவருகிறார். முதல் படமான மேயாதமான் திரைப்படத்தில் இவருக்கு வைபவ்க்கு ஜோடியாக நடித்த இவர் இப்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கரிடம் பேட்டி ஒன்றில் அவரது காதலன் பற்றி கேள்வி எழும்பியது.
அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் கூறியிருப்பதாவது “எனக்கு எந்தவிதமான பிரபல அந்தஸ்தும் இல்லாத காலத்தில் இருந்து அவரை எனக்குத் தெரியும். என் அப்பாவிற்கு பிறகு என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளக் கூடியவர் அவர். இன்னும்கூட சொல்லப்போனால் எனக்கு ஒன்று என்றால் அவர் தன் உயிரையும் கொடுப்பார். அந்த அளவுக்கு என் மீது அன்பு கொண்டுள்ளார். மேலும் அவருடன் உள்ள இந்த உறவை நான் பெரிதும் மதிக்கின்றேன்.” இவ்வாறு உருக்கமாக பதிலளித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.