Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

கிரிக்கெட் போதும்…. சினிமாவில் குதிக்கும் தல தோனி….. குதூகலத்தில் ரசிகர்கள்…!!

பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வெப் சீரியஸ் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இருப்பினும், அவர் தொடர்ந்து IPL போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம் ஆகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே கேப்டனாக உள்ள தோனியின் தயாரிப்பு நிறுவனம் தன் இரண்டாவது பிராஜக்ட்டான புதிய வெப் சீரியல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இன்னும் வெளிவராத ஒரு புத்தகத்தை மையமாக வைத்து சை-பை திரில்லர் சீரியஸாக இது உருவாக உள்ளதாக சக்ஷி தோனி தெரிவித்துள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வு மற்றும் முன் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |