Categories
சினிமா தமிழ் சினிமா

12 ஆண்டுகள் கழித்து…. வைரலாகும் பிரபல நடிகை புகைப்படம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

12 ஆண்டுகள் கழித்து சாய்பல்லவி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக திகழ்ந்து வருபவர் சாய்பல்லவி.சமீபத்தில்,  தமிழில் மாரி 2 படத்தில் நடித்துள்ளார். மீண்டும் தமிழில் எப்போது நடிப்பார் என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகை சாய் பல்லவி குறித்து ஒரு செய்தியும், அவரது புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.

அது என்னவென்றால், ஜெயம் ரவி, கங்கனா ராவ் ஆகியோர் இணைந்து நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படமான தாம்தூம் படத்தில், சாய் பல்லவி ஒரு சிறிய ரோலில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. எதற்காக இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்து விட்டது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருவது சாய்பல்லவியின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |