சிகரெட் அடித்ததை கண்டித்ததால் நண்பனை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ என்ற பகுதியில் என்ற 14 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவருக்கு பல நண்பர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சவுரப்பை பெற்றோர் கடைக்கு சென்று பொருள் வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார். இவனும் அவரது நண்பருடன் சேர்ந்து கடைக்கு சென்றுள்ளார். கடைக்குச் சென்று திரும்பியபோது அவரது நண்பன் சிகரெட்டை எடுத்து அடித்துள்ளார். இதை பார்த்த சவுரப் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுமாறும் இல்லை என்றால் உனது பெற்றோரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் சவுரப்பை ஒரு பிளேடால் மணிக்கட்டு இரண்டிலும் அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சவுரப்பை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடிய பிறகு அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.