ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரண்டாவது முறையாக ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ தற்போது நாட்டின் நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார். எனவே நாட்டு மக்கள் அனைவரும் வாரத்தில் குறைந்தது நான்கு நாட்கள் நிறுவன வேலைகளை வீட்டிலிருந்தே செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கடந்த வாரம் வியாழன் கிழமை முதலே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்படும் என்று நிபுணர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஜெர்மன் அரசு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இந்த முறையும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.