தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார் சோ தர்மன்.
விருது வழங்கப்பட்டது குறித்து பேசிய சோ. தர்மன், சாகித்ய அகாடமி விருது அறிவித்து மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்தது மிகப் பெரிய மகிழ்ச்சியளிக்கிறது. நான் நடிகன் அல்ல நான் ஒரு எழுத்தாளர் சூரியகாந்தி பூ போல இல்லாமல் மூலிகை போல் இருப்பேன். எந்த விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன் அங்கீகாரமும் கிடைத்து கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்தார்.