தமிழகத்தின் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது .
தென் தமிழகத்தில் மேற்கே உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பல மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் சுட்டெரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெயில் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து அதிகமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.