Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து 7 வயது சிறுமி சாதனை…!!

7 வயது சிறுமி தனது தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே நெடுங்குளம் என்னும் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்துக்கொண்டனர்.  இப்போட்டியில்  கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அக்சயா தன் தலைமுடியால், 700 கிலோ எடையுள்ள காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.

 

இதனையடுத்து மாணவி அக்சயாவுக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புரூஸ்லீ நினைவு கோப்பை வழங்கப்பட்டது.

Categories

Tech |