Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் கடைசி ஆசை… வெளியான வீடியோ… சோகத்தில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் குறித்த மறைந்த நடிகை சித்ராவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது ரசிகர்கள், சின்னத் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் தைரியமான பெண்ணாக வெளி உலகத்துக்கு தோன்றிய சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில் நான் விஜய்யின் தீவிர ரசிகை என்றும், வயதாக வயதாக அவர் இளமையாக கொண்டே போகிறார். அவர் என் திருமணத்திற்கு நிச்சயம் அழைப்பேன். தான் அவரை இன்னும் பார்க்க கூட முயற்சி செய்யவில்லை என்று கூறியுள்ளார். திருமணத்திற்கு விஜய் அழைக்கும் எண்ணத்தில் இருந்த சித்ரா தனது எண்ணம் நிறைவேறாமலே, உலகை விட்டு சென்றது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://twitter.com/Sakthii_VFC/status/1336874964473978880

Categories

Tech |