Categories
சினிமா தமிழ் சினிமா

‘மக்களின் நாயகி’ விருதை வாங்கிய சித்ரா…. கண்கலங்க வைக்கும் புகைப்படம்…!!!

மக்களின் நாயகி என்ற விருதை சித்ரா வாங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய் டெலிவிசன் அவார்ட்ஸில் சித்ராவிற்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கப்பட்டது.

இதனை சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மூலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஒருவேளை சித்ரா உயிருடன் இருந்து இந்த விருதை பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படத்தை ரசிகர்கள் உருவாக்கிய அதனை இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் கண்கலங்க வைக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |