தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமான சித்ரா அதன்பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது. சீரியலில் பிஸியான நடிகையாக இருந்த போதே ஹேமந்த் என்பவரை காதலித்து சித்ரா திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நடிகை சித்ரா திடீரென இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து 2 வருடங்களாகும் நிலையில், நடிகை சரண்யா அவரைப் பற்றிய ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார்.
அவர் சித்ரா என்னிடம் நான் காதலிக்க தொடங்கிய பிறகு எனக்கு சீரியல்களில் ரொமான்ஸ் மற்றும் முதலிரவு காட்சிகள் போன்றவைகள் வருகிறது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. என்னுடைய வருங்கால கணவர் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எங்களுக்குள் பிரச்சனை தான் வருகிறது. இனி சீரியலில் அந்த மாதிரி சீன்களில் நடிக்க முடியாது என்று தான் கூற வேண்டும் என்று சித்ரா தன்னிடம் கூறியதாக சரண்யா கூறியுள்ளார். மேலும் அவர்கள் பேசிய ஆடியோவையும் தன்னிடம் சித்ரா காண்பித்து அழுது புலம்பியதாக சரண்யா கூறியுள்ளார்.