தனது மருந்து கொரோனாவை குணப்படுத்தியுள்ளது எனவும் இதனை பயன்படுத்தும்படி சித்த மருத்துவர் தணிகாசலம் என்று கெஞ்சி கேட்டுள்ளார்
லண்டனில் கொரோனா தொற்றினால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தனது மருந்து காப்பாற்றி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு இதனை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கவேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் என்று கேட்டுள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய தொற்று காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையில் தமிழகத்தை சேர்ந்த சித்தமருத்துவ தணிகாசலம் இதற்கான மறந்து தன்னிடம் இருப்பதாக கூறினார்.
அந்த சமயத்தில் தமிழ் ஊடகங்கள் பலவும் இது குறித்து பரபரப்பாக பேசியது அதனால் பாதிக்கப்பட்ட பலர் தனது மருந்தை சாப்பிட்டு குணம் அடைந்ததாகவும் அவர் சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது லண்டனில் கொரனா வினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார் சித்த மருத்துவர் தணிகாசலம். இது குறித்து லண்டனில் இருக்கும் அந்தப் பெண் பேசும் ஆடியோ ஒன்றை ஆதாரமாக தணிகாசலம் வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் எனது பெயர் சிந்து லண்டனில் வசித்து வருகிறேன் தனது கணவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அதன் பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு காய்ச்சல் தூக்கமின்மை நடக்கக்கூட முடியாமல் முடியாத சூழ்நிலையில் இருந்தேன். ஆம்புலன்ஸுக்கு போன் செய்து அவர்கள் வந்து சோதித்துவிட்டு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று சென்றுவிட்டார்கள். அதற்கு அடுத்த நாளும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மீண்டும் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தேன் வந்து ஆக்சிஜன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசோதித்துவிட்டு தேவையில்லை எனக் கூறிவிட்டு சென்றுவிட்டனர் சாகும் வலியை உணர்ந்தேன்.
இறந்துவிடுவேன் என்று நினைத்த சமயத்தில் நண்பர் ஒருவர் தணிகாசலம் ஐயா அவர்களின் தொலைபேசி எண்ணை கொடுத்தார். எனது சகோதரர் தணிகாசலம் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பொழுது குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மருந்து எடுக்க சொன்னார். இரண்டு மணி நேரத்தில் அவர் கூறிய இடத்திற்கு சென்று மருந்து எடுத்தோம். இரண்டு நாட்கள் ஆகிவிட்டது 80% நன்றாக மூச்சு விடுகிறேன். நெஞ்சுவலி வரவில்லை முன்பு இருந்த நிலைக்கும் இப்போது இருக்கும் நிலைக்கு வித்தியாசம் தெரிகிறது. தணிகாச்சலம் அவர்களின் மருந்து எனக்கு பெரிதும் உதவியது. இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். தணிகாச்சலம் ஐயா அவர்களுக்கு நன்றி என உருக்கமாக கூறியிருந்தார்.
மேலும் ஆடியோவில் பேசிய நோயாளி குறித்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம், லண்டனில் இருக்கும் மருத்துவ நிறுவனங்களும், அமெரிக்க அதிபர் டிரம்ப் என யார் கேட்டாலும் நோயாளி பற்றிய அடையாளங்களை கொடுக்க தயாராக இருக்கிறோம். கொரோனாவுக்கு மருந்து இல்லை மருந்து இல்லை என்று உலகத்தை ஏமாற்றாதீர்கள். 12 முதல் 24 மணி நேரத்தில் அவற்றிலிருந்து விடுபட முடியும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் உலக சுகாதார நிறுவனம் ஏன் இதனை கண்டுகொள்ளவே இல்லை என்று தெரியவில்லை என்ற ஆதங்கத்தையும் குற்றச்சாட்டையும் தணிகாசலம் வைத்துள்ளார் முன்வைத்துள்ளார்.
https://youtu.be/521Iml1ewaw