சசிகலா நன்றாக இருப்பதாகவும், உணவு உட்கொள்வதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலையாக இருக்கும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. கொரோனா தொற்று மற்றும் நிமோனியா காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சசிகலாவின் உடல் நன்றாக ஒத்துழைக்கிறது.தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா உணவு உட்கொண்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.