பயத்தங்காய் வதக்கல் சீன முறையில்
தேவையான பொருள்கள்
பயத்தங்காய்- அரை கட்டு
வெங்காயதாள்- ஒரு கட்டு
இஞ்சி -ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு- ஒரு டேபிள்ஸ்பூன்
வத்தல் மிளகாய்- 10
எண்ணெய்- 2டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப

செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு வெங்காயத்தாள் ஒன்றாக போட்டு வதக்கவும். அடுத்து காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு வதக்கவும். அடுத்து பயத்தங்காய் போட்டு வதக்கவும். பூண்டு விழுது சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும் மிதமான தீயிலேயே செய்யவும் தேவையான அளவு உப்பு போட்டு எல்லாமும் சேர்ந்து கிண்டி இறக்கவும்.
இப்போது பயத்தங்காய் வதக்கல் சீன முறையில் ரெடி