Categories
உலக செய்திகள்

இலங்கை குழந்தைகளுக்காக… சீன குழந்தைகள் செய்த செயல்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

சீன நாட்டில் தொடக்கப் பள்ளி பயிலும் மாணவர்கள், இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு 11 லட்சம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவுக்கே அதிக விலை கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் இலங்கைக்கு உதவி அளித்து வருகின்றன. எனினும், அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஆயிரம் ஏழை சிறுவர்களின் கல்வி செலவிற்காக சீன நாட்டில் இருக்கும் தொடக்கப்பள்ளி பயிலக்கூடிய மாணவர்கள் சுமார் 11 லட்சம் நிதிஉதவி  வழங்கியுள்ளனர். இதனை கொழும்பு பகுதியில் இருக்கும் சீன தூதரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |