சீனாவுக்கு கடத்தி செல்லப்பட்ட கொடியவகை பாம்பின் விஷத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியா – வங்கதேச எல்லையில் கண்ணாடி ஜாடியில் அடைத்து கடத்தி செல்லப்பட்ட கொடியவகை பாம்பின் விஷம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த விஷத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் 32 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், பாம்பு விஷம் இருந்த ஜாடியில் ‘made in France’ என பொறிக்கப்பட்டிருந்தாக கூறினர்.
இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது, பாதுகாப்பு படையால் கைப்பற்றப்பட்ட ஜாடி வனத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில், இந்த விஷம் சீனாவுக்கு கடத்த முயன்றதாகவும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, விஷ ஜாடியை வனத்துறையினர் அவர்களின் உயர் அதிகாரிகளிடம் ஆய்வக சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளனர்.