பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திறமையானவர்களாக வளர வேண்டும் என்பதற்காக புதிய வளர்ப்பு முறையை பின்பற்றுகின்றனர்.
உலகில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் திறமையாக வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஒரு சிலரோ அதனை தங்களது குழந்தைகளிடமே வெளிப்படையாக கூறுவதுண்டு. இந்த நிலையில் சீனாவில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எல்லா துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அதாவது சிக்கன் வளர்ப்பு என்னும் புதிய முறையை பின்பற்றியுள்ளனர். ஆனால் இந்த முறை பெற்றோர்களின் முட்டாள்தனம் என்று உலகம் முழுவதும் கூறப்படுகிறது. இருப்பினும் சீனா மக்கள் இதனை பெரிதும் நம்புகின்றனர். இந்த முறையில் கோழியின் இரத்தம் ஒரு ஊசி மூலம் உறிஞ்சப்பட்டு அதன் பின்பு குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது.
இதுவே சிக்கன் வளர்ப்பு முறை எனப்படும். இதனால் மலட்டுத்தன்மை, புற்றுநோய் மற்றும் வழுக்கை போன்ற பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோழி இரத்தத்தில் இருக்கும் ஒரு வகை ஸ்டீராய்டுகள் குழந்தையை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இதனால் அவர்கள் கல்வி, விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பர் என்று கூறப்படுகிறது. இது தற்பொழுது சீனாவில் மிகவும் பிரபலமாகி உள்ளது. ஏற்கனவே சீனாவிலுள்ள பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.