Categories
உலக செய்திகள்

தொடர்ந்து வீசும் புயல்கள்…. சிக்கி தவிக்கும் மக்கள்…. பொது இடங்களுக்கு செல்லத் தடை…!!

சீனாவை டைபூன் இன் ஃபா புயலானது இன்று மாலை ஜெஜியாங் பகுதியில் தாக்கப்போவதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

சீனாவின் மத்திய பகுதியில் பெய்த கன மழையினால் ஹெனான் மாகாணம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் டைபூன் இன் ஃபா புயலானது கடலில் மையம் கொண்டுள்ளதால் ஜெஜியாங் பகுதியைத் இன்று மாலை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் வேகம் மணிக்கு 155 முதல் 191 கிலோமீட்டரில் வீசக்கூடும். இதனால் கடலில் பெரும்  பேரலைகள் மற்றும் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மழையின் காரணமாக நிலச்சரிவு போன்ற பேரிடர் ஏற்படக்கூடும். இதுவரை எந்த உயிர் சேதமும் டைபூன் இன் ஃபா புயலினால் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த புயல் எச்சரிக்கை காரணமாக ஜெஜியாங் பகுதியில் உள்ள கடைகள், சந்தைகள், பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அவசியமென்றால் சாலை போக்குவரத்தும் தடை செய்யப்படும். இந்த புயலால் அதிகபட்சமான  மூன்றாம் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலையங்களில் 90%க்கும் அதிகமான விமான போக்குவரத்து தடைப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிலும் பொதுமக்கள் கூடும் இடங்களான பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை மூடப்பட்டது. இதனை அடுத்து கடலில் நிற்கும் பயண மற்றும் சரக்கு கப்பல்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

Categories

Tech |