உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் சைனோபார்ம் தடுப்பூசி நல்ல பலனை அளிக்கிறது என தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசி பாதிப்பை ஏற்படுத்தாது அது மிகவும் பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தலைமை இயக்குனர் மரிய ஏஞ்சலா சிமாவோ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் சைனோபார்ம் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான நல்ல பலனை அளிக்கிறது என தெரிவித்துள்ளது. மேலும் உலகில் உள்ள மக்களுக்கு இதுவரை 6 கோடியே 20 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டதில் பாதிப்பை ஏற்படுத்தாமல் நல்ல பலனை தந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.