உலகின் மிக வேகமான இணையதள சேவையான 5ஜி தொழில் நுட்பத்தை சீனா அறிமுகம் செய்ய உள்ளது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஹீவாவி நிறுவனம் விரைவில் 5G தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக 5G செல்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த 5G தொழில் நுட்பமானது கார்களில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில் நுட்பமானது கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Balong 5000 5G சிப்பினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதாகும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஹீவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.