சீனா போன்ற கொரோனா தொற்று இல்லாத இடங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் ஒரு ஆண்டில் இரண்டு மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
சீன ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, ஒரு வருடத்தில் 2 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் தெரிவித்திருப்பதாவது, தொற்றை தடுக்கக்கூடிய சிறப்பான தடுப்பூசிகளை தயாரிப்பது வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும், தற்போதிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை கணக்கிட, பிரிட்டன் மற்றும் சிலி போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். உலகளவில் மொத்தமாக கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிகளை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.