இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சீனாவுடன் சேர்த்து வரைபடமாக மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் சீனா இந்தியா எல்லை பகுதிகளை மேக்மோகன்எல்லை கோட்டினால் பிரித்துள்ளனர் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை ஒட்டி இருக்கும் அந்த எல்லையை தாண்டி சீனா சில சமயம் அத்து மீறுவது வழக்கம். அதிலும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினால் சிக்கி வரும் சூழலில் சீனா தன் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
அந்த வரைபடத்தில் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை சீனாவுடன் சேர்த்து குறிப்பிட்டுள்ளது. இரண்டு நாடும் எல்லை தொடர்பான பிரச்சினைகளை பேசி சுமூகமான சூழல் நிலவும் பொழுது இதுபோன்ற நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. கொரோனாவால் பலநாடுகள் கலங்கி நிற்பதற்கு சீனாவின் அலட்சியம்தான் காரணம் என உலகநாடுகள் அதிருப்தியில் உள்ள நிலையில் இந்தியாவை சீண்டும் விதமாக வரைபடத்தை மாற்றி அமைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.