Categories
உலக செய்திகள்

இந்திய எல்லைப்பகுதியை ஆக்கிரமிக்க…. சீனா மேற்கொள்ளும் திட்டம்…!!!

சீன அரசு இந்தியாவின் எல்லை பகுதியில் ஆதிக்கத்தை அதிகரிக்க திபெத்தியர்களை கட்டாய குடியேற்றம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, இமயமலை பகுதியில் சுமார் 624 வீடுகளை கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், வரும் 2030 ஆம் வருடத்திற்குள் திபெத்தின் தன்னாட்சி பகுதியில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திபெத்திய மக்களை வெளியேற்ற தீர்மானத்திருக்கிறது.

சுற்றுச்சூழலை காப்பதற்காக கடல் மட்டத்திலிருந்து சுமார் 4800 மீட்டர் உயரத்தில் வாழும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதாக சீனா தெரிவித்தது. எனினும் அதற்கான அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்களும் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, எல்லைப்பகுதியில் ஆதிக்கத்தை செலுத்தத்தான் சீனா இவ்வாறு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |