Categories
உலக செய்திகள்

திருமணம் செய்ய பெண்கள் பற்றாக்குறை.. அதிகரிக்கும் ஆண்களின் எண்ணிக்கை.. திண்டாடி வரும் பிரபல நாடு..!!

சீனாவில் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக  கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

உலகிலேயே சீனா தான் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. எனினும் இன்னும் சில வருடங்களில் இந்தியா, முதல் இடத்திற்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் சமீபத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 3 கோடி ஆண்கள் திருமணமாகாமல் இருக்கிறார்களாம்.

அதாவது சீன மக்கள் ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புகிறார்களாம். ஆனால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சீனாவில் அதிகமாக இருக்கிறது. எனினும் பாலின இடைவெளி தற்போது அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே நிபுணர்கள் இதன் காரணமாக வருங்காலத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகின்றனர்.

அதாவது கணக்கெடுப்பின்படி, சீனாவில் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் சுமார் 113.5 ஆண்கள் உள்ளனர். இதனால் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் 1.2 கோடி குழந்தைகள் கடந்த வருடத்தில் பிறந்திருக்கின்றனர். இதில் சுமார் 6 லட்சம் ஆண் குழந்தைகளுக்கு, திருமண வயது வரும்போது பெண்கள் கிடைக்காது என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |