சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை கொண்டாடும் விதமாக அங்குள்ள மக்கள் முத்தம் கொடுக்கும் போட்டி நடத்தி வருகின்றனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதனுடைய தாக்கம் சீனாவில் தற்போது குறைந்துள்ளது. இதனால் இன்றைய நாள் வரை நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு அனைத்தும் தளர்த்தப்பட்டு,
தற்போது கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பை கொண்டாடுவதற்காக நாம் இனி வெளியுலகில் சுதந்திரமாக நடமாட போகிறோம் என்ற ஆனந்தத்திலும், முத்த போட்டியானது சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இந்த போட்டியில் 10 ஜோடிகள் கலந்து கொண்டனர்.
ஜோடிகளுக்கு நடுவே கண்ணாடி கிளாஸ் ஒன்று வைக்கப்படும். அவர்கள் எதிர் எதிரே நின்று முத்தம் கொடுத்துக் கொள்வார்கள். அதன்பின் அந்த கண்ணாடி கிளாஸ் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாட பலவித வழிகள் இருந்தபோதிலும், இந்த முறை நோய் பரவலை மீண்டும் ஏற்படுத்த கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.