Categories
உலக செய்திகள்

இவ்வளோ வேகமாவா போகும்…. உலகின் அதிவேக ரயில்…. கண்டுபிடித்த பிரபல நாடு….!!

உலகின் மிக அதிவேக ரயிலானது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில்ரெயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேசன் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த  நிறுவனமானது உலகின் மிக அதிவேக ரயிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது மேக்லெவ் என்ற உலகின் மிக அதிவேக ரயிலை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த ரயில் சீனாவில் இருக்கும் குயிங்டோவ் என்ற நகரின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 600 கிலோமீட்டர் ஆகும். மேலும் இந்த ரயிலில் இரண்டு ஜோடி காந்தங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு ஜோடி காந்தம் ரயிலை தண்டவாளத்தில் இருந்து விலகி மேலே உயர்த்த உதவுகிறது. மேலும் இந்த ரயிலானது பீஜிங் பகுதியிலிருந்து ஹாங்காங் நகரை இரண்டரை மணி நேரத்தில் கடந்து சென்று விடுமாம். ஆனால் இதே தொலைவை விமானத்தில் கடந்துசெல்ல 3 மணி நேரமும் அதிவேக ரயிலில் சுமார் 5.5 மணி நேரமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |