Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்…. இந்தியாவிற்கு உதவ தயார்…. தெரிவித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்….!!

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவிற்கு சீனா உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவுக்கு ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிப் பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இணைந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதில் சீனா இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் சீன அரசு தொலைக்காட்சி மூலம் வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது “கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவிற்கும் நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் சீன வெளியுறவு துறை கடந்த வாரம் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |