கொரோனா தொற்றை சமாளிக்க இந்தியாவிற்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக சீனா முன்வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவின் தொற்று எண்ணிக்கை 3,32,730 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இது கடந்த ஆண்டு தொற்று உருவத்திலிருந்து அதிகபட்ச தொற்று எண்ணிக்கை பதிவாகியது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில் அண்மையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது “கொரோனா தொற்றுநோய் அனைத்து மனித குலத்தின் பொதுவான எதிரியே ஆகும். அதனை கட்டுப்படுத்த சர்வதேச ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவி தேவை” என கூறியுள்ளார். இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கு அனைத்து வசதிகளையும் உதவிகளையும் ஆதரவையும் வழங்க சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.