பிரபல டென்மார்க் பத்திரிகை நிறுவனம் சீனாவின் தேசிய கொடியை கிண்டல் செய்ததோடு மன்னிப்பு கேட்கவும் மறுத்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட இடமாக சீனா பார்க்கப்படுகிறது. அங்கிருந்துதான் வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவியதால் பல்வேறு நாட்டினர் சீனாவை குற்றம்சாட்டி கூறிவந்தனர். உதாரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு வரை அதனை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் டென்மார்க் நாட்டின் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சீன தேசிய கொடியில் உள்ள நட்சத்திரங்களை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கொரோனா வைரஸின் புகைப்படத்தை வரைந்து வைத்துள்ளனர். இதனால் தேசியக்கொடி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அந்த பத்திரிக்கை சீனாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சீன அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் மன்னிப்பு கேட்க டென்மார்க் பத்திரிகை நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.